close
Choose your channels

இன்று மாலை 'கலைஞர் 100' கலை விழா.. ரஜினி, கமல் உறுதி.. அஜித், விஜய் கலந்து கொள்வார்களா?

Saturday, January 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திரையுலகினர் சார்பில் ’கலைஞர் 100’ என்ற கலை விழா இன்று மாலை நடைபெற உள்ளது. சென்னை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விழா குறித்த அழைப்பிதழ்களில் முன்னிலை என உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என இருவரது பெயர்களும் இடம் பெற்றுள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடக்க இருக்கும் இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் அஜித், விஜய் இருவரும் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அஜித் கடந்த சில நாட்களாக துபாயில் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய நிலையில் அவர் மீண்டும் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளதால் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது

ஆனால் விஜய் தற்போது சென்னையில் தான் படப்பிடிப்பில் உள்ளார். மேலும் இன்று நடைபெற இருக்கும் விழாவை அடுத்து திரைப்படப் படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும், விஜய் சென்னையில் இருப்பதாலும் அவர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்று மாலை நடைபெறும் விழாவில் அவர் கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில் தமிழ் திரை உலகில் சேர்ந்த அனைத்து நட்சத்திரங்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கலந்து கொள்வார் என்றும் இந்த விழா பிரம்மாண்டமாக நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment