இளையதிலகம் பிரபுவுக்கு கமல்-ரஜினியின் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Monday,December 26 2016]

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும், இளையதிலகம் என்று அழைக்கப்படுபவருமான பிரபு தனது 60வது பிறந்த நாளை நேற்று சிறப்பாக கொண்டாடினார். அவருடைய பிறந்த நாளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பலர் அன்னை இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருமே சிவாஜி கணேசனின் அன்பை பெற்றவர்கள். இருவரும் சிவாஜி குடும்பத்தின் ஒரு அங்கமாகவே இருந்து வருகின்றனர்.

நான் வாழ வைப்பேன்', படிக்காதவன்', 'விடுதலை', 'படையப்பா' ஆகிய படங்களில் ரஜினியும், 'நாம் பிறந்த மண்', 'சத்யம்', 'தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் கமல்ஹாசனும் நடித்துள்ளனர்.

அதேபோல் பிரபுவுடன் தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், சந்திரமுகி ஆகிய படங்களில் ரஜினியும், வெற்றி விழா, வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்களில் கமல்ஹாசனும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் 60வது வயதை தொடும் உடன்பிறவா சகோதரர் பிரபுவுக்கு நேரில் வந்து கமல், ரஜினி வாழ்த்து கூறியது பிரபு குடும்பத்தினர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக கூறப்படுகிறது.