ரஜினி-கமலுடன் இணையும் அமிதாப்-ஷாருக்கான்

  • IndiaGlitz, [Saturday,November 19 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான '2.0' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை மும்பையில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் விழாவிற்கே கிட்டத்தட்ட ஒரு படத்தின் பட்ஜெட் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விழாவில் ரஜினியின் நெருங்கிய நண்பர்க்ளில் ஒருவரும் உலக நாயகனுமாகிய கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களான அமிதாப்பச்சன் மற்றும் ஷாருக்கான் ஆகியோர்கள் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ரஜினி, கமல், அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் என கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து முக்கிய திரையுலக விஐபிகளும் கலந்து கொள்ளும் இந்த விழா உண்மையிலேயே பிரமாண்டமான விழாதான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.