close
Choose your channels

'கபாலி' டீசர் செய்த மற்றொரு சாதனை

Friday, May 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' டீசர் இணையதளத்தில் பெரும்புயலை கிளப்பியதோடு இந்திய அளவிலும், உலக அளவிலும் பல சாதனைகளை புரிந்தது என்பதை பார்த்தோம். இந்நிலையில் தற்போது இந்த டீசரின் மேலும் ஒரு சாதனை குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
இந்திய அளவில் இதுவரை அதிக பார்வையாளர்கள் பார்த்த டீசராக அமீர்கான், அபிஷேக் பச்சன், கேத்ரினா கைப் ஆகியோர் நடித்த 'தூம் 3' என்ற படத்தின் டீசர் இருந்தது. ஆனால் தற்போது இந்த சாதனையை ரஜினியின் 'கபாலி' முறியடித்துவிட்டது.
தூம் 3' படத்தின் டீசரின் மொத்த பார்வையாளர்கள் 17,053,167 ஆகும். ஆனால் இந்த எண்ணிக்கையை 'கபாலி' முறியடித்து 17,109,944 என்ற அளவில் உள்ளது. மேலும் இன்னும் அதிகளவிலான பார்வையாளர்களை இந்த டீசர் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே உலக அளவில் அதிக லைக்குகள் பெற்றதில் இரண்டாவது இடத்தில் உள்ள 'கபாலி' டீசர், தற்போது இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment