அஜித்தின் 'வேதாளத்துடன் கனெக்ஷன் ஆனது 'கபாலி'

  • IndiaGlitz, [Sunday,June 26 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க அந்த படத்தை பற்றிய விறுவிறுப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
'கபாலி' படத்தின் வெளிநாட்டு, வெளி மாநில வியாபாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற மிகப்பெரிய போட்டி இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் தயாரிப்பாளர் தாணு அலுவலகத்தில் இந்த படத்தின் தமிழக உரிமையை பெற பலர் குவிந்து வந்தனர்.
இந்நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே 'வேதாளம்' உள்பட ஒருசில படங்களின் ரிலீஸ் உரிமையை பெற்று தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்த அனுபவம் உள்ள இந்த நிறுவனம் 'கபாலி' படத்தையும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.