'கபாலி'க்கு கிடைத்த ரூ.100 கோடி எக்ஸ்ட்ரா வசூல்
- IndiaGlitz, [Thursday,August 04 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 22ஆம் தேதி ரிலீஸ் ஆகி ரூ.400 கோடி வசூலை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்திற்கு சுமார் ரூ.100 கோடி விளம்பர நடவடிக்கைகளால் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தை புரமோஷன் செய்த ஏர் ஆசியா, ஏர்டெல், அமேசான், முத்தூட், கேட்பரி சாக்லேட் உள்பட பல நிறுவனங்களின் பிராண்டிங் மூலம் மட்டுமே ரூ.100 கோடி கிடைத்துள்ளதாக கலைப்புலி எஸ்.தாணுவின் மகன் பரந்தாமன் தெரிவித்துள்ளார். முத்தூட் நிறுவனம் வெளியிட்ட 'கபாலி' வெள்ளி நாணயங்கள் இதுவரை 20,000 வரை விற்பனையாகியுள்ளதாகவும் இன்னும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான நாணயங்கள் விற்பனையாகி வருவதாகவும் அந்நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்வதே இன்றைய காலகட்டத்தில் பெரிய விஷயமாக கருதப்படும் நிலையில் பிராண்டிங் வசூல் மூலம் மட்டுமே 'கபாலி' ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இன்னும் என்னென்ன சாதனைகளை இந்த படம் நிகழ்த்த போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.