பாரீஸ் நகரில் 'கபாலி' செய்த மிகப்பெரிய சாதனை
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தின் இரண்டு டீசர்கள், மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பல உலக சாதனைகளை நிகழ்த்திவிட்டது. ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படம் தற்போது இன்னொரு சாதனையை நிகழ்த்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் 'Rex Cinema' என்ற திரையரங்கில் ரஜினியின் 'கபாலி' ரிலீஸ் ஆகவுள்ளது. ஒரே நேரத்தில் 2000 பார்வையாளர்கள் உட்கார்ந்து படம் பார்க்கும் அளவுக்கு பிரமாண்டமான திரையரங்கம் ஆகும். மேலும் ஐரோப்பிய கண்டத்திலேயே இந்த திரையரங்கம்தான் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. உலகப்புகழ் பெற்ற படங்கள், ஹாலிவுட் படங்கள் மட்டுமே இந்த திரையரங்கில் வெளியாகி வரும் நிலையில் இந்த திரையரங்கில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் 'கபாலி'தான் என்பது நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம் ஆகும்.
இந்த திரையரங்கின் முன்புறம் இப்போதே ரஜினியின் மிகப்பெரிய கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரிலீசுக்கு முன்பே பல சாதனைகளை செய்து வரும் ரஜினியின் 'கபாலி' ரிலீசுக்கு பின்னர் என்னென்ன சாதனைகளை செய்யவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments