மலேசியாவில் 'கபாலி' செய்த முதல் சாதனை

  • IndiaGlitz, [Tuesday,August 02 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது. ரூ.500 கோடி வசூலை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் இந்த படம் மிக விரைவில் இலக்கை அடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் மலேசியாவின் 10 மில்லியன் மலேசிய ரிங்கிட் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன்' திரைப்படத்தின் மொத்த மலேசிய வசூல் 9.773 மில்லியன் மலேசிய ரிங்கிட் என்பதும், இந்த வசூலை 'கபாலி' பத்தே நாட்களில் முறியடித்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் 10 மில்லியன் மலேசிய ரிங்கிட் வசூல் செய்த முதல் தமிழ்ப் படம் 'கபாலி'தான் என்பது குறிப்பிடத்தக்கது. 'கபாலி'யின் இந்த சாதனையை ரஜினி+ஷங்கரின் '2.0' முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்