close
Choose your channels

கபாலியின் கேரக்டர்கள். இதுவரை வெளிவராத தகவல்கள்

Thursday, March 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'மெட்ராஸ்' இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி முடித்துள்ள 'கபாலி' படத்தின் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சில முக்கிய தகவல்களை பிரபல பத்திரிகை ஒன்றுக்கு ரஞ்சித் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்த படத்தின் வயதான கேங்ஸ்டர் வேடம் என்றும், அவருடைய மனைவியாக நடித்துள்ள ராதிகா ஆப்தே குமுதவள்ளி என்ற பெயரில் எஸ்டேட்டில் பணியும் பெண்ணாகவும் நடித்துள்ளார்.


ரஜினியின் கேங்க்ஸ்டரில் ஒரு உறுப்பினராக தினேஷும், ரஜினியின் நெருங்கிய நண்பராக ஜான்விஜய்யும் நடித்துள்ளனர்.

நடிகர் கலையரசனுக்கு இந்த படத்தில் வாத்தியார் வேடம். அதேபோல் ரஜினியின் மகளாக நடித்துள்ள தன்ஷிகா சந்தர்ப்பவசத்தால் கேங்ஸ்டராக மாறி ரஜினிக்கு எதிராக திரும்பும் வித்தியாசமான கேரக்டர்.

பஞ்ச் டயலாக் இல்லாமல் ரஜினி நடிக்கும் படம்தான் கபாலி. ஆனாலும் அவர் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் அனல் பறக்கும் வகையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து இருக்கும்.

இவைதான் 'கபாலி' படம் குறித்த புதிய தகவல்கள் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment