சூப்பர் ஸ்டாரின் 'கபாலி' டீசர் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Monday,March 28 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' மற்றும் இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' ஆகிய இரண்டு படங்களையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் விஜய்யின் 'தெறி' திரைப்படம், வரும் ஏப்ரல் மாதம் தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இடைவேளையில் 'கபாலி' படத்தின் டீசர் திரையிட தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டு வருவதாக புதிய தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
இதற்கு முன்னர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த 'கணிதன்' திரைப்படத்தின் ரிலீஸின்போது அந்த படத்தின் இடைவேளையில் 'தெறி' படத்தின் டீசரை அவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது 'தெறி' படத்தின் இடைவேளையில் 'கபாலி' டீசர் வெள்ளித்திரையில் ஜொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.