கபாலி' படத்தின் வட அமெரிக்கா வியாபாரம் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,January 25 2016]

கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' மற்றும் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. 'தெறி' வரும் ஏப்ரல் மாதத்திலும், 'கபாலி' வரும் மே மாதத்திலும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 'கபாலி' படத்தின் வியாபாரம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது


'கபாலி' படத்தின் வட அமெரிக்கா ரிலீஸ் உரிமை ரூ.8.5 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக தயாரிப்பாளர் எஸ்.தாணு நேற்று நடைபெற்ற 'மலரட்டும் மனித நேயம்' நிகழ்ச்சியில் கூறியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதேபோல் மற்ற நாடுகளின் ரிலீஸ் உரிமையின் வியாபாரம் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் தெரிகிறது.

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், உள்பட பலர் நடித்துள்ள 'கபாலி' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

More News

ரஜினி, கமல், விஜய்யை முந்திய அஜித். லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு

சென்னை லயோலா கல்லூரி அவ்வப்போது தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகளை நடத்தி வரும் நிலையில் தற்போது கோலிவுட் திரையுலகின் ஃபேவரேட் நடிகர் யார்? என்ற கருத்துக்கணிப்பை எடுத்து அதன் முடிவை நேற்று அறிவித்துள்ளது....

சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தடையா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சிசிஎல் என்னும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த சில ஆண்டுகளாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது....

மாடர்ன் காலத்தின் மணிரத்னம் கார்த்திக் சுப்புராஜ். எஸ்.ஜே.சூர்யா புகழாரம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய்சேதுபதி, அஞ்சலி உள்பட பலர் நடித்து முடித்துள்ள 'இறைவி' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா ஒருசில கருத்துக்களை தெரிவித்துள்ளார்....

'கொடி'யை அடுத்து அனிருத் வெளியேறிய மற்றொரு படம்

தனுஷ் முதன்முதலாக இருவேடங்களில் நடித்து வரும் 'கொடி' படத்திற்கு இசையமைக்க முதலில் அனிருத் தான் ஒப்பந்தமாகியிருந்தார்......

2016-ல் தசாவதாரம் எடுக்கும் சந்தோஷ் நாராயணன்

இசைஞானி இளையராஜா, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இசை ஜாம்பவான்கள் கோலிவுட்டில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு 'அட்டக்கத்தி' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன் நான்கே ஆண்டுகளில் முன்னணி இசையமைப்பாளராக உருவாகியுள்ளார்....