கபாலி'க்கு முன்பே 'மகிழ்ச்சி' ஃபேமஸ். ரகசியத்தை உடைத்த 'மெட்ராஸ்' நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளிவந்து உலக சாதனை படைத்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தின் டீசரின் இறுதியில் ரஜினிகாந்த் 'மகிழ்ச்சி' என்ற ஒற்றை வார்த்தை வசனத்தை பேசியிருப்பார். ரஜினி உச்சரித்ததால் இந்த ஒரே ஒரு வார்த்தை தற்போது உலக அளவில் ஃபேமஸ் ஆகியுள்ளது. சமூக வலைத்தளங்கள், நண்பர்களின் உரையாடலில் 'மகிழ்ச்சி' என்ற இந்த வார்த்தை இல்லாமல் இருக்காது.
இந்நிலையில் 'கபாலி' டீசருக்கு முன்பே அதாவது 'மெட்ராஸ்' படத்தின் படப்பிடிப்பின்போதே இந்த 'மகிழ்ச்சி' படக்குழுவினர்களிடம் ஃபேமஸ் ஆகிவிட்டது என்று நடிகை ரித்விகா கூறியுள்ளார்.
சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ரித்விகா, 'மகிழ்ச்சி குறித்து கூறியதாவது, "'மெட்ராஸ் படத்தின் படப்பிடிப்பின்போதே ரஞ்சித்தின் உதவி இயக்குனர் அதியன் என்பவர் ஒவ்வொரு ஷாட்டும் நல்லபடியாக முடிந்தவுடன் 'மகிழ்ச்சி' என்று கூறுவார். இது கொஞ்சம் கொஞ்சமாக ரஞ்சித் உள்பட படக்குழுவினர் அனைவரிடத்திலும் பரவிவிட்டது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியதால்தான் இந்த வார்த்தை உலகப்புகழ் பெற்றது' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com