'கபாலி' ரசிகர்களுக்கு நாளை இன்னொரு இன்ப அதிர்ச்சி

  • IndiaGlitz, [Saturday,June 11 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தின் பாடல்கள் நாளை வெளிவரவுள்ளதால் 'நெருப்புடா, உள்ளிட்ட பாடலை கேட்க ரஜினி ரசிகர்கள் அனைவரும் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக 35 நொடிகள் டீசர் ஒன்று நாளை காலை 11.06க்கு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே கடந்த மே மாதம் 1ஆம் தேதி வெளியான டீசர் உலக அளவில் சாதனை செய்துள்ள நிலையில் இன்னொரு உலக சாதனையை நிகழ்த்த ரஜினி ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.