close
Choose your channels

ரஜினி கூறியது தப்புதான்: ரஜினி பட நாயகி பேட்டி

Friday, November 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ஆளுமையுள்ள தலைவர்கள் இல்லை என ரஜினிகாந்த் கூறியது தப்பு என்று அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் பேட்டி அளித்த போது ’தமிழகத்தில் இன்னும் ஆளுமையுள்ள தலைவருக்கு வெற்றிடம் இருப்பதாக கூறினார். ரஜினியின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வந்த நிலையில் அவருடன் ’வீரா’, ‘உழைப்பாளி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், ஆந்திர மாநில எம்எல்ஏவுமான நடிகை ரோஜா அவர்கள் இது குறித்து கருத்து கூறிய போது ’தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நல்ல ஆளுமையுடன் இருக்கிறார் என்றும் ஆனால் ரஜினிகாந்த் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என ஏன் கூறினார் என்று எனக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்

தன்னுடைய தொகுதி தமிழகத்தின் எல்லையில் இருப்பதால் தமிழகத்தில் இருந்து தொழில் தொடங்க வருபவர்கள் தன்னை சந்தித்து அடிக்கடி பேசுவார்கள் என்றும் அப்போது அவர்கள் அதிமுக குறித்தும் எடப்பாடி பழனிசாமி குறித்தும் பெருமையாக கூறி வருகிறார்கள் என்றும், மேலும் ஜெயலலிதா இருந்தபோது முகம் கூட தெரியாமல் இருந்த எடப்பாடி பழனிச்சாமி, தற்போது கட்சியையும் ஆட்சியையும் நல்ல முறையில் நிர்வாகம் செய்து வருவதாகவும் நடிகை ரோஜா கூறியுள்ளார்

ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவரே ரஜினியின் கருத்துக்கு எதிரான கருத்தை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment