ரஜினி கூறியது தப்புதான்: ரஜினி பட நாயகி பேட்டி

  • IndiaGlitz, [Friday,November 29 2019]

தமிழகத்தில் ஆளுமையுள்ள தலைவர்கள் இல்லை என ரஜினிகாந்த் கூறியது தப்பு என்று அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் பேட்டி அளித்த போது ’தமிழகத்தில் இன்னும் ஆளுமையுள்ள தலைவருக்கு வெற்றிடம் இருப்பதாக கூறினார். ரஜினியின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வந்த நிலையில் அவருடன் ’வீரா’, ‘உழைப்பாளி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், ஆந்திர மாநில எம்எல்ஏவுமான நடிகை ரோஜா அவர்கள் இது குறித்து கருத்து கூறிய போது ’தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நல்ல ஆளுமையுடன் இருக்கிறார் என்றும் ஆனால் ரஜினிகாந்த் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என ஏன் கூறினார் என்று எனக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்

தன்னுடைய தொகுதி தமிழகத்தின் எல்லையில் இருப்பதால் தமிழகத்தில் இருந்து தொழில் தொடங்க வருபவர்கள் தன்னை சந்தித்து அடிக்கடி பேசுவார்கள் என்றும் அப்போது அவர்கள் அதிமுக குறித்தும் எடப்பாடி பழனிசாமி குறித்தும் பெருமையாக கூறி வருகிறார்கள் என்றும், மேலும் ஜெயலலிதா இருந்தபோது முகம் கூட தெரியாமல் இருந்த எடப்பாடி பழனிச்சாமி, தற்போது கட்சியையும் ஆட்சியையும் நல்ல முறையில் நிர்வாகம் செய்து வருவதாகவும் நடிகை ரோஜா கூறியுள்ளார்

ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவரே ரஜினியின் கருத்துக்கு எதிரான கருத்தை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

பிரியங்கா ரெட்டி கொலையில் குற்றவாளிகள் அளித்த திடுக்கிடும் வாக்குமூலம்!

தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவருடைய உடல் ஐதராபாத்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே

கள்ளக்காதலியுடன் உல்லாசம்: திடீரென நிர்வாணமாக தெருவில் ஓடிய சென்னை வாலிபர்

சென்னை வாலிபர் ஒருவர் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்தபோது திடீரென தெருவில் நிர்வாணமான நிலையில் ஓடியது சிசிடிவி கேமராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பாக்யராஜுக்கு தமிழ்நாடு மகளிர் ஆணையம் சம்மன்

நடிகர் பாக்யராஜ் சமீபத்தில் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு தமிழ்நாடு மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 2ஆம் தேதி நேரில் ஆஜராக மகளிர் ஆணைய தலைவி

தேசம் எப்போதுதான் பெண்களுக்கு பாதுகாப்பானதாக அமையும்: பிரியங்கா ரெட்டி கொலை குறித்து பிரபல நடிகை 

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி நேற்று இரவு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கிய உள்ளது.

3 மாஸ் சேர்ந்ததால் 'தெறி மாஸ்' ஆகிருச்சு: 'தலைவர் 168' குறித்து பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் வரும் பொங்கலன்று வெளியாக இருக்கும் நிலையில், அவர் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான 'தலைவர் 168' திரைப்படத்தின்