இந்தியாவின் சக்தி வாய்ந்த 100 நபர்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல ஆங்கில நாளிதழ் இந்தியாவின் சக்திவாய்ந்த நபர்கள் என்ற 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 78வது இடத்தில் உள்ளார்.
2018ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி. இவரை அடுத்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, இந்தியாவின் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவாத், சோனியா காந்தி ஆகியோர் இரண்டு முதல் ஐந்தாவது இடம் வரை உள்ளனர்.
இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 78வது இடத்தில் உள்ளார். இவரை அடுத்த எம்.ஜி.ஆர் என்று மக்கள் பார்ப்பதாகவும், இவர் நடித்துள்ள 'காலா' படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருப்பதாலும் இவர் சக்தி வாய்ந்த மனிதராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் கூறிய 'சிஸ்டம் சரியில்லை' என்ற பஞ்ச், பலரின் நடுக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த பட்டியலில் 39வது இடத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, 64வது இடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 65வது இடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 66வது இடத்தில் நீடா அம்பானி, 77வது இடத்தில் அமிதாப்பச்சன், 79வது இடத்தில் தீபிகா படுகோனே, 93வது இடத்டில் ஜிக்னேஷ் மேவானி, ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments