சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டு புதிய அவதாரங்கள்

  • IndiaGlitz, [Wednesday,March 07 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிக விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து பொதுவாழ்வில் களமிறங்கவுள்ளார். அவருடைய ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் தேர்வு முடிவடைந்தது அவர் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிடுவார் என்று கருதப்படுகிறது

இந்த நிலையில் ரஜினிகாந்த் கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து டுவிட்டரில் உள்ளார். அவர் இருக்கும் ஒரே சமூக வலைத்தளம் இதுமட்டுமே என்பதும், இந்த பக்கத்தில் 4.58 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு சமூக வலைத்தளங்களிலும் இன்று முதல் இணைந்துள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் 'வணக்கம்' என்ற ஒரே ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். இந்த வணக்கத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்துள்ளது.

அரசியல் கட்சி தொடங்கிவிட்டால் தனது கருத்துக்கள் தனது கட்சியின் கொள்கைகள் மக்களை சென்றடைய அவர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஸ்ரீதேவி மறைவுக்குக் பின் ஜான்வி கொண்டாடிய நெகிழ்ச்சியான பிறந்த நாள்

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவு மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு செய்தியாக இருக்கலாம், ஆனால் அவருடைய குடும்பத்தினர்களுக்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு.ghter J

ராணுவம் வந்தாலும் பெரியாரை அகற்ற முடியாது: சத்யராஜ் ஆவேசம்

பெரியார் சிலை உடைப்பு குறித்து பாஜகவின் எச்.ராஜா நேற்று கூறிய கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தலைவர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பெரியார் சிலை விவகாரம்: முழு பூசணிக்காயை மறைக்கும் எச்.ராஜா

நேற்று காலை பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூலில் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை போல் தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார்.

சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை? மன அழுத்தம் காரணமா?

அயனாபுரம் கே-2 காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த சதீஷ்குமார் என்பவர் இன்று காலை திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் சிலை உடைப்பு கருத்துக்கு கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்

கோலிவுட் திரையுலகில் ஜல்லிக்கட்டில் தொடங்கி நெடுவாசல், நீட் உள்ளிட்ட அனைத்து சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்தவர்களில் ஒருவர் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் என்பது தெரிந்ததே.