ரஜினிகாந்த் தமிழகத்திற்கு ஏற்ற தலைவன் அல்ல: நாஞ்சில் சம்பத்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு அரசியலில் குதிக்கவுள்ளதாக அறிவித்த பின்னர் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து கட்சி தலைவர்களும் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதில் கமல்ஹாசனும் விதிவிலக்கல்ல. இந்த நிலையில் சமீபத்தில் தினகரன் அணியில் இருந்து பிரிந்த நாஞ்சில் சம்பத் ரஜினிகாந்த் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருப்பதாகவும், அவர் தமிழகத்தின் தட்பவெப்பத்திற்கு ஏற்ற தலைவன் இல்லை என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சமீபத்தில் தூத்துகுடி சென்ற ரஜினிகாந்த், போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், 'ரஜினிகாந்த் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கிறார். அறிவார்ந்த ரீதியில் அவரால் பயணிக்க முடியாது என்பது ஏற்கெனவே நான் அனுமானித்ததுதான். ஆனால், உரிமைக்குப் போராடுகிறவனின் வியர்வையைக் கொச்சைப்படுத்துகிற அநியாயத்தைச் செய்கிற ஒரு பூர்ஷுவாவாக இவர் அவதாரம் எடுப்பார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. திரையுலகம் என்ற பிம்பத்தில் இருந்துகொண்டு, தான் சொல்லுகிறதெல்லாம் வேதம் என்று கருதிக்கொள்கிற ரஜினிகாந்த், தமிழகத்தின் தட்ப வெட்பத்துக்கு ஏற்ற தலைவன் அல்ல! என்று கூறியுள்ளார்.
வழக்கம்போல் இந்த விமர்சனத்திற்கும் ரஜினிகாந்த் பதிலளிக்க போவதில்லை என்றாலும் அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் நாஞ்சில் சம்பத்துக்கு பதிலடி கொடுத்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments