ரஜினி ஒரு கடவுள்: கமல் சகோதரர் சாருஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஜினிகாந்த் ஒரு கடவுள் என்றும் மக்கள் அவரை கடவுளாக பார்க்கின்றார்கள் என்றும், அதனால் தான் ரஜினி அடுத்த முதல்வராக வர வாய்ப்பு இருப்பதாக கூறினேன் என்றும் கமல்ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கமல்ஹாசன் மீது மக்களுக்கு பக்தி இல்லை என்றும், திராவிடர் இயக்கத்தின் முதல் கொள்கையே மீண்டும் பார்ப்பனர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் என்பதால் கமல் முதல்வராக வர வாய்ப்பே இல்லை என்றும் சாருஹாசன் மேலும் அந்த பேட்டியில் கூறினார்.
கடவுள் இல்லை என்ற கொள்கையில் நான் இருந்தாலும் ரஜினி இருப்பதால் அவரை கடவுள் என்று கூறுகிறேன் என்றும் ரஜினி கட்சி ஆரம்பித்தால் நிச்சயம் முதல்வர் ஆவார் என்றும் சாருஹாசன் தெரிவித்தார்.
இதுவரை கமலிடம் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்ட மக்கள், ரஜினியை ஏன் இன்னும் வரவில்லை என்று கேள்வி கேட்டு வருகிறார்கள் என்றும், இதிலிருந்தே ரஜினி மீது மக்களுக்கு பக்தி அதிகம் இருப்பது தெரிகிறது என்றும் சாருஹாசன் மேலும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments