ரஜினி ஒரு கடவுள்: கமல் சகோதரர் சாருஹாசன்

  • IndiaGlitz, [Sunday,May 06 2018]

ரஜினிகாந்த் ஒரு கடவுள் என்றும் மக்கள் அவரை கடவுளாக பார்க்கின்றார்கள் என்றும், அதனால் தான் ரஜினி அடுத்த முதல்வராக வர வாய்ப்பு இருப்பதாக கூறினேன் என்றும் கமல்ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் மீது மக்களுக்கு பக்தி இல்லை என்றும், திராவிடர் இயக்கத்தின் முதல் கொள்கையே மீண்டும் பார்ப்பனர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் என்பதால் கமல் முதல்வராக வர வாய்ப்பே இல்லை என்றும் சாருஹாசன் மேலும் அந்த பேட்டியில் கூறினார்.

கடவுள் இல்லை என்ற கொள்கையில் நான் இருந்தாலும் ரஜினி இருப்பதால் அவரை கடவுள் என்று கூறுகிறேன் என்றும் ரஜினி கட்சி ஆரம்பித்தால் நிச்சயம் முதல்வர் ஆவார் என்றும் சாருஹாசன் தெரிவித்தார்.

இதுவரை கமலிடம் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்ட மக்கள், ரஜினியை ஏன் இன்னும் வரவில்லை என்று கேள்வி கேட்டு வருகிறார்கள் என்றும், இதிலிருந்தே ரஜினி மீது மக்களுக்கு பக்தி அதிகம் இருப்பது தெரிகிறது என்றும் சாருஹாசன் மேலும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More News

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு தகவல்

ரஜினிகாந்த் நேற்று அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியுள்ள நிலையில் அவரது போயஸ் கார்டன் வீட்டுக்கு சற்றுமுன்னர் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

கீர்த்தி சுரேஷின் 'நடிகையர் திலகம்' சென்சார் தகவல்கள்

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'நடிகையர் திலகம்' என்ற படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தார் என்பது தெரிந்ததே

நாங்க தமிழச்சிங்க: செல்வராகவன் எழுதிய கவிதை

பிரபல இயக்குனர் செல்வராகவன் ஏற்கனவே 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டு தற்போது சூர்யா நடித்து வரும் 'NGK' என்ற படத்தை  இயக்கி வருகிறார்.

மன்சூர் அலிகான் செய்த மகத்தான செயல்

வில்லன் மற்றும் குணசித்திர நடிகரான மன்சூர் அலிகான் அவ்வப்போது சமூக பிரச்சனைகளுக்கு தைரியமாக குரல் கொடுப்பவர் என்பது தெரிந்ததே.

குளிர்பானத்தில் மதுகலந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த மூவர் கைது

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணவனால் கைவிடப்பட்டு பெற்றோருடன் தங்கியிருந்த நிலையில் அந்த பெண்ணுக்கு நைவின்மாலிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.