பின்னால் பார்த்து கொண்டே போனால் முன்னேற முடியாது: தூத்துகுடி செல்லும் முன் ரஜினி பேட்டி

  • IndiaGlitz, [Wednesday,May 30 2018]

சமீபத்தில் நடந்த தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 அப்பாவிகள் பலியான நிலையில் இன்று பலியானவர்களின் குடும்பத்தினர்களை சந்திக்கவும், படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துகுடி செல்ல சற்றுமுன் கிளம்பினார். இதனையடுத்து சற்றுமுன் அவரது இல்லம் முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியாதாவது:

தூத்துகுடியில் தற்போது மக்கள் ஒரு கஷ்டமான சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர். இந்த கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூற நான் தூத்துகுடி செல்லலவிருக்கின்றேன். என்னை அவர்கள் ஒரு நடிகராக பார்த்தால் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறேன். அவர்களை சந்திப்பதால் எனக்கும் சந்தோஷம் கிடைக்கும்' என்று கூறினார்.

மேலும் தூத்துகுடி கலவரத்திற்கு திமுக தான் காரணம் என தமிழக முதல்வர் கூறியிருப்பது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், 'இது முழுக்க முழுக்க அரசியல். ஒருவரை ஒருவர் குறைசொல்லும் அரசியல் போக்கு மாற வேண்டும் சிங்கம் அவ்வப்போது பின்னால் பார்த்து கொண்டே செல்லும். ஆனால் பின்னால் மட்டுமே பார்த்து கொண்டிருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. இது மாற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார்.

மேலும் காலா படத்திற்கு தடை கர்நாடக வர்த்தக சபை தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, 'இதுகுறித்த செய்தியை நான் நேற்றுதான் பார்த்தேன். தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் ஒரு அங்கம் தான் கர்நாடக திரைப்பட சங்கம். இதற்கு ஒரு நல்ல தீர்வு தருவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

மேலும் பிரதமர் இதுவரை தூத்துகுடி துப்பாக்கி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்காதது குறித்து மீடியாவான நீங்கள்தான் அவரிடம் தான் கேட்க வேண்டும் இதுகுறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் திமுக சட்டப்பேரவையை புறக்கணித்தது குறித்தும் கருத்து கூற விரும்பவில்லை என்றும் ரஜினிகாந்த் மேலும் கூறினார்.

More News

பழம்பெரும் இயக்குனர், தயாரிப்பாளர் முக்தா.சீனிவாசன் காலமானார்

பழம்பெரும் இயக்குனர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் இன்று காலமானார். அவருக்கு வயது 88

'காலா' படத்திற்கு கர்நாடகா தடை: 

ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.

தூத்துகுடி செல்கிறார் ரஜினிகாந்த்

சமீபத்தில் தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராடிய அந்த பகுதி மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் அப்பாவிகள் 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

'அருவி' இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல்

அதிதி பாலன் நடிப்பில் இயக்குனர் அருண்பிரபு இயக்கிய 'அருவி' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பிரபல பாடகர் சுட்டுக்கொலை: காதல் விவகாரமா?

பிரபல பஞ்சாப் பாடகர் நவ்ஜோத் சிங் சுட்டு கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.