அரசியலுக்கு வருகின்றேனா? மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு முன் ரஜினி பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களும் சென்னை வர அழைப்பு விடுக்கப்பட்டது என்பதும் இன்று அதிகாலை முதல் மாவட்ட செயலாளர்கள் சென்னை வந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இன்னும் ஒரு சில நிமிடத்தில் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்காக ராகவேந்திரா மண்டபத்துக்கு புறப்படும் முன் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வரப் போகின்றேனா? எதிர்காலத்தில் அரசியல் கட்சியை தொடங்கலாமா? என மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கருத்து கேட்க இருப்பதாகவும் மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு உங்களிடம் நல்ல செய்தியை அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்
மேலும் ’அண்ணத்த’ படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார். இன்றைய ஆலோசனைக்கு பின்னர் ரஜினியின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவுள்ளேன்- ரஜினிகாந்த் #Rajinikanth #JUSTIN #Politics @rajinikanth pic.twitter.com/5GP2Ut0y0r
— Jaya Plus (@jayapluschannel) July 12, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com