ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்: தூத்துகுடியில் ரஜினிகாந்த் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர். சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடக்கி வைத்திருந்தார்.
சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்
சில போராட்டங்கள் தூண்டிவிடப்படுகின்றன. போராட்ட பூமியாக இருந்தால் தொழிற்துறை, வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். எந்த பிரச்னையாக இருந்தாலும் நீதிமன்றத்தை அணுக வேண்டும். எதற்கெடுத்தாலும் போராடக் கூடாது. போராட்டம் செய்யும்போது மக்களும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.
எந்த அரசு வந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது. ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை திறக்க வேண்டும் என நீதிமன்றத்தை அணுகினால் அவர்கள் மனிதர்களே கிடையாது. மேலும் எல்லாவற்றிற்கும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துவது எதற்கும் தீர்வாகாது. ஒருநபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com