ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்: தூத்துகுடியில் ரஜினிகாந்த் பேட்டி

  • IndiaGlitz, [Wednesday,May 30 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர். சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடக்கி வைத்திருந்தார்.
சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்

சில போராட்டங்கள் தூண்டிவிடப்படுகின்றன. போராட்ட பூமியாக இருந்தால் தொழிற்துறை, வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். எந்த பிரச்னையாக இருந்தாலும் நீதிமன்றத்தை அணுக வேண்டும். எதற்கெடுத்தாலும் போராடக் கூடாது. போராட்டம் செய்யும்போது மக்களும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.

எந்த அரசு வந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது. ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை திறக்க வேண்டும் என நீதிமன்றத்தை அணுகினால் அவர்கள் மனிதர்களே கிடையாது. மேலும் எல்லாவற்றிற்கும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துவது எதற்கும் தீர்வாகாது. ஒருநபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

More News

கூவத்தூர் ரகசியத்தை சொல்லவும் தயங்க மாட்டேன். கருணாஸ்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும்வரை இனி திமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று திமுக நேற்று கூறிய நிலையில்

தமிழ்நாடே உங்களை நம்பிதான் உள்ளது. காயமடைந்த தூத்துகுடி நபர் உணர்ச்சிவசம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்றார் என்பது தெரிந்ததே.

ஜோதிகாவின் அடுத்தபடத்தின் படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில் அவர் அடுத்ததாக மணிரத்னம் இயக்கி வரும் 'செக்க செவந்த வானம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சுசீந்திரனின் அடுத்த விளையாட்டு இன்று முதல் ஆரம்பம்

தமிழ் திரையுலகில் விளையாட்டு சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான திரைப்படங்களான 'வெண்ணிலா கபடிக்குழு' மற்றும் 'ஜீவா' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன்'

தூத்துகுடி துப்பாக்கி சூடு: ரஜினிகாந்த் நிவாரண உதவி அறிவிப்பு

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தையும் காயம் அடைந்தவர்களையும் சந்திக்க இன்று ரஜினிகாந்த் தூத்துகுடி சென்றுள்ளார். தூத்துகுடி விமான நிலையத்தில் இருந்து அவர் தற்போது