என்னை ரொம்ப உசுப்பேற்றி விட்டார்கள்: சென்னை திரும்பிய ரஜினிகாந்த் பேட்டி

  • IndiaGlitz, [Friday,January 11 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்தினர்களுடன் அமெரிக்காவுக்கு ஓய்வில் சென்றிருந்த நிலையில் நேற்று அவர் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

'பேட்ட' படம் வெளியாகி அனைவரும் பிடித்திருப்பதாக கேள்விப்பட்டேன். இதற்கான எல்லா பெருமையும் சன்பிக்சர்ஸ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவினர்களுகே போய் சேரும்

இந்த படத்தால் ரசிகர்கள் சந்தோஷமாகியிருப்பது குறித்து எனக்கு ரொம்ப சந்தோஷம். அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டியதுதானே என்னுடைய வேலை. பழைய ரஜினி ஸ்டைலை கொண்டு வந்ததற்கு முக்கிய காரணம் கார்த்திக் சுப்புராஜ்தான். ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு ஷாட்டையும் என்னை உசுப்பேற்றி உசுப்பேற்றி பண்ண வைத்துவிட்டார்' என்று ரஜினிகாந்த் கூறினார்

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது