எனக்கு பெரும் ஏமாற்றம்; மாவட்ட செயலாளர்கள் சந்திப்புக்கு பின் ரஜினி பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் மாவட்ட செயலாளர்களை சந்தித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒரு ஆண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களாக சந்தித்தேன். அவர்கள் நிறைய கேள்விகள் கேட்டார்கள். அதற்கு நான் பதில் அளித்தேன். நாங்கள் நிறைய விஷயங்களை பரிமாறிக் கொண்டோம். மாவட்ட செயலாளர்கள் அனைவருக்கும் ரொம்ப திருப்தி. ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு அவ்வளவாக திருப்தி இல்லை. எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். அது என்ன ஏமாற்றம் என்பது குறித்து நான் இப்போது சொல்ல விரும்பவில்லை. நேரம் வரும்போது சொல்கிறேன் என்று கூறினார்
பின்னர் இஸ்லாமிய அமைப்பினர்களை சந்தித்தது ஒரு இனிமையான அனுபவம் என்றும் அன்பு சகோதரத்துவம் நாட்டில் ஒற்றுமை நிலவுவதற்கு நீங்கள் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள் என்றும், நான் கண்டிப்பாக என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று உறுதி கூறினேன் என்றும் ரஜினிகாந்த் கூறினார்
மேலும் தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக தான் கூறியது உண்மைதான் என்றும் அந்த வெற்றிடத்தை என்னாலும் கமலஹாசனாலும் நிரப்ப முடியுமா என்பதை காலம் தான் பதில் சொல்லும் என்று ரஜினிகாந்த் கூறினார். ரஜினிகாந்தின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout