நான் இரண்டுவிதமான ஸ்ரீதேவியை பார்த்துள்ளேன் ரஜினிகாந்த் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு தனது டுவிட்டரில் ரஜினிகாந்த் இரங்கலை தெரிவித்திருந்தார் என்பதை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ஸ்ரீதேவியின் மறைவு குறித்து கூறியதாவது:
ஸ்ரீதேவி அவர்கள் ஒரு மிகப்பெரிய நடிகர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். நான் இரண்டுவிதமான ஸ்ரீதேவியை பார்த்துள்ளேன். கேமிராவுக்கு முன் உள்ள ஸ்ரீதேவி. கேமிராவுக்கு பின் உள்ள ஸ்ரீதேவி. கேமிராவுக்கு பின் ஒன்றுமே தெரியாத அப்பாவியாக அன்றைய தின காட்சிகள் குறித்து கேட்டு கொள்வார். ஆனால் கேமிரா முன் வந்துவிட்டால் ஃபயர், கரண்ட் மாதிரி நடிப்பார்.
இதுவரைக்கும் அவர் யார் மீதும் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. இந்தி திரையுலகில் அவர் நுழையும் போது அவருக்கு ஒரு இந்தி வார்த்தை கூட தெரியாது. ஆனால் அவர் எப்படி இந்தி திரையுலகை எளிதில் சர்வசாதாரணமாக கைப்பற்றினார் என்பது ஒரு கலைஞனாக எனக்கு மட்டுமின்றி அனைவருக்குமே ஒரு ஆச்சரியமாக இருந்தது. அவர் ஒரு பிறவி நடிகை.
ஸ்ரீதேவியின் மறைவு இந்திய திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு. எனக்கு இருக்கும் மிகச்சில நெருங்கிய நண்பர்களில் ஒருவராக அவர் இருந்தார். அவரை நான் இழந்தது மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.
இவ்வாறு ரஜினிகாந்த் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments