என் பாணி வேறு, கமல் பாணி வேறு: கமல் சந்திப்புக்கு பின் ரஜினி பேட்டி

  • IndiaGlitz, [Sunday,February 18 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் சற்றுமுன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இதுவொரு நட்பு ரீதியான சந்திப்பு என்று கமல் கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் கூறியதாவது

அரசியல் பயணம் செய்யவுள்ள கமலுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அனைவருக்கும் தெரியும் கமல்ஹாசன், பணம், பேர், புகழுக்காக அரசியலுக்கு வரவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக அவர் அரசியலுக்கு வருகிறார். அவருக்கு ஆண்டவனின் ஆசிர்வாதம் கிடைக்க நான் வேண்டுகிறேன். அவருடைய எல்லா பயணத்திலும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்

சினிமாவிலேயே என்னுடைய பாணி வேறு, கமல்ஹாசனின் பாணி வேறு. அதேபோல் தான் அரசியலிலும் இருக்கும். இருந்தாலும் இருவருக்கும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உள்ளது

இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் சந்திப்பு குறித்து தெரிவித்தார்.