'காலா'வுக்கு எதிர்ப்புகள் இவ்வளவுதானா? ரஜினிகாந்த் ஆச்சரியம்

  • IndiaGlitz, [Tuesday,June 05 2018]

'காலா' படத்திற்கு எதிர்ப்புகள் அதிகம் இருக்கும் என்று தான் எதிர்பார்த்ததாகவும், ஆனால் எதிர்ப்புகள் தான் எதிர்பார்த்ததை விட குறைவாக இருப்பதாகவும் ரஜினிகாந்த் நேற்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

'காலா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர் நேற்றிரவு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 'காலா' படத்திற்கு இன்னும் எதிர்ப்புகள் அதிகம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எதிர்ப்புகள் கம்மியாகத்தான் உள்ளது.

மேலும் 'காலா' படத்தை கர்நாடகாவில் எதிர்க்க எந்தவித காரணமும் இல்லை. எனவே முதல்வர் குமாரசாமி அவர்களும், நான் பெரிதும் மதிக்கும் தேவகவுடா அவர்களும் 'காலா' படத்தை திரையிட வழிவகை செய்வார்கள் என்றும், காலா' படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள் என்றும் நான் எதிர்பார்க்கின்றேன்.

மேலும் அரசியல் வேறு சினிமா தொழில் வேறு. இரண்டையும் சம்பந்தப்படுத்தக்கூடாது என்று கூறிய ரஜினிகாந்த் ஒருசிலர் இரண்டையும் சம்பந்தப்படுத்தி அரசியல் செய்கின்றனர், நாம் என்ன செய்ய முடியும்' என்று கூறினார்.

More News

கட்டிப்பிடி வைத்தியதால் காவிரி வருமா? கமலை கிண்டல் செய்த அமைச்சர் ஜெயகுமார்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து காவிரி நீர் குறித்து ஆலோசனை செய்தார்.

மாணவி பிரதீபா தற்கொலை: ரஜினிகாந்த் இரங்கல்

நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட விழுப்புரம் மாணவி பிரதீபாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு தோல்வி எதிரொலி: மேலும் ஒரு மாணவர் மரணம்

நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபமான சம்பவம் தமிழகம் முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மகனுக்கு வாழ்த்து கூறிய ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மகன் அமீன், 'எந்திரன்' படத்தில் இடம்பெற்ற 'புதிய மனிதா' உள்ளிட்ட ஒருசில பாடல்கள் பாடியுள்ளார். தந்தையை போலவே இசைத்துறையில் ஆர்வம் உள்ள அமீன், படிப்பிலும் சிறந்தவர்

நீட் தேர்வு தோல்வி எதிரொலி: விழுப்புரம் மாணவி தற்கொலை

கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய