இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் முதல் ஆளாக போரடுவேன்: ரஜினிகாந்த் பேட்டி
- IndiaGlitz, [Wednesday,February 05 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிஏஏ, என்.ஆர்.சி போன்ற சட்டங்கள் குறித்து இதுவரை எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என அவரை விமர்சனம் செய்பவர்கள் கருத்து கூறி வந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் இதுகுறித்து தனது கருத்தை கூறியுள்ளார்
சிஏஏ சட்டட்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தை அரசியல் கட்சிகள் ஏற்படுத்தி வருகின்றனர். உண்மையில் இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது. பாகிஸ்தான் பிரிவினையின்போது இதுதான் நமது மண், இதுதான் நமது நாடு என்று முடிவெடுத்த இஸ்லாமியர்களை எப்படி இந்தியா வெளியேற்றும்? ஒருசில அரசியல் கட்சிகள் தங்களின் சுயலாபத்திற்காக இதனை கையில் எடுத்துள்ளனர். ஒருவேளை இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் ஏதாவது அச்சுறுத்தல் நடந்தால் முதல் ஆளாக நானே குரல் கொடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்
அதேபோல் என்ஆர்சி என்பது மிகவும் அவசியமானது. இந்த கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே வெளிநாட்டினர் எவ்வளவு பேர் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியும். மேலும் மாணவர்கள் போராடும்போது இந்த சட்டத்தை குறித்து பெரியவர்களிடம் கேட்டு அறிந்து அதன்பின் போராட வேண்டும். இல்லையெனில் அரசியல் கட்சிகள் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டால் உங்கள் வாழ்க்கைக்குத்தான் பாதிப்பு ஏற்படும்
மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இன்னும் சம்மன் வரவில்லை என்றும் அவ்வாறு சம்மன் வந்தால் அவர்களிடம் நான் நேரில் இதுகுறித்து விளக்கம் அளிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இங்கு 30 ஆண்டுகளாக அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும் அவர் தெரிவித்தார் ரஜினிகாந்தின் இந்த பேட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது