அமிதாப்பச்சனிடம் நலம் விசாரித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் நேற்று இரவு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது இதனை அடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இந்திய திரை உலகின் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தும் பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்

அந்த வகையில் அமிதாப்பச்சன் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக்பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உடனடியாக அவர் இருவரிடமும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும் கேட்டறிந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது

More News

ராஜ்யசபா எம்பியின் சேலஞ்சை ஏற்று கொண்ட சமந்தா-நாகார்ஜூனன்

உலகம் முழுவதும் அவ்வப்போது புதுப்புது சேலஞ்சுகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகும் என்பதும் கடந்த சில ஆண்டுகளில் ஐஸ்கட்டி சேலஞ்ச் உள்பட பல்வேறு சேலஞ்சுகள் வைரல் ஆகி வருவதும் தெரிந்தது 

அமிதாப்பச்சன் குணமடைய வாழ்த்தும் திரையுலக பிரபலங்கள்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நேற்றிரவு கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பாலிவுட்டை மட்டுமின்றி இந்திய திரையுலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அமிதாப்பை அடுத்து அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா: ஐஸ்வர்யாராய், ஜெயாபச்சன் நிலை என்ன?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதாக நேற்றிரவு வெளிவந்த தகவல் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

சூர்யா பிறந்த நாளில் ஒரு ஆச்சரியம்: ஜிவி பிரகாஷ் அறிவிப்பு

தமிழ்த் திரையுலகின் மாஸ் நடிகர்களின் பிறந்தநாளின்போது சமூகவலைதளத்தில் காமன் டிபி போஸ்டர்களை பிரபலங்கள் வெளியிடுவது கடந்த சில வருடங்களாக வழக்கமாக உள்ளது.

சீனாவை அடுத்து கஜகஜஸ்தானில் புதிய நோய்த்தொற்று: எச்சரிக்கை விடுக்கும் WHO!!!

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கஜகஜஸ்தானில் குடியிருக்கும் சீன மக்களுக்கு நேற்று ஒரு ரகசிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.