'வேட்டையன்' படத்தின் 4 நாட்கள் வசூல் இத்தனை கோடியா? ஆனாலும் ஒரு சிக்கல்..!

  • IndiaGlitz, [Monday,October 14 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி, வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களின் வசூல் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான வேட்டையன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது, மேலும் பெரும்பாலான விமர்சகர்கள் நேர்மறையான விமர்சனங்களை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் நான்கு நாட்களின் வசூல் ரூ. 240 கோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூலைப் பெற்றுள்ள வேட்டையன் திரைப்படம் இன்னும் சில நாட்களில் ரூ. 300 கோடி அல்லது ரூ. 400 கோடி வசூலை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இதே சமயம், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், குடும்ப ஆடியன்ஸ்கள் திரையரங்குக்கு செல்வது சிரமமாகும் என்றும், இதனால் வசூல் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

More News

அரசியல் உள்பட எந்த வியாதியும் இல்லை.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த காமெடி நடிகர்..!

பிரபல காமெடி நடிகர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில், அரசியல் உள்பட எந்த நோயும் தனக்கு இல்லை

'சூர்யா 45' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இயக்குனர் , இசையமைப்பாளர் இவர்கள் தான்..!

சூர்யாவின் 45வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் பற்றிய தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஃபேன் பாயாக இருந்தவன் இப்போது ஃபேமிலி பாய்.. 'வேட்டையன்' குறித்து ரக்சனின் பதிவு..!

"ஃபேன் பாயாக இருந்த நான் தற்போது ஃபேமிலி பாயாக மாறிவிட்டேன்" என்று ஆர்.ஜே. ரக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

தனுஷின் 'குபேரா' ரிலீஸ் தேதி இதுவா? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனுஷ் நடித்து வரும் "குபேரா" என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படம் ரிலீசாகும் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது.

ஒரே வாரம் மட்டுமே இருந்த ரவீந்தருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? பிக்பாஸ் ஆச்சரியங்கள்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், முதல் வாரத்தில் ரவீந்தர் எலிமினேஷன் செய்யப்பட்டது பார்வையாளர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.