12 ஆண்டுகள் கழித்து 'எந்திரன்' பட ரகசியத்தை வெளியிட்ட ஒளிப்பதிவாளர்

  • IndiaGlitz, [Thursday,June 25 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவான ’எந்திரன்’ திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரஜினியின் திரையுலக வாழ்வில் இந்த படத்தின் வெற்றி ஒரு மைல்கல் என்று கூறலாம்

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கும் நாளன்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் ரஜினிகாந்த் ஸ்டில் ஒன்று வெளியானது. கையில் ரோஜா வைத்தபடி எந்திரன் வேடத்தில் இருக்கும் அந்த ஸ்டில் இணையதளங்களில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் ஒரிஜினலாக ரஜினியை வைத்து எடுத்த இதே புகைப்படம் ஒன்றை தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் அவர்கள் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு ’எந்திரன்’ படப்பிடிப்பு தொடங்கும் போது இந்த புகைப்படத்தை தான் எடுத்ததாகவும், இந்த புகைப்படம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் புகைப்படம் இல்லை என்றும் உண்மையாகவே ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல் முழுவதும் சில்வர் கலர் பெயின்ட் அடித்துக்கொண்டு சில்வர் கலர் தொப்பி மற்றும் சில்வர் கலர் கண்ணாடி அணிந்து கொண்டு கையில் ரோஜாவுடன் இருக்கும் இந்த புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை என்றும் தற்போது தான் வெளியிட்டதாகவும் கூறினார்

மேலும் தலைவர் அவர்கள் இந்த இந்த புகைப்படத்தின் போட்டோஷூட்டின்போது இதற்காக அதிகபட்ச ரிஸ்க் எடுத்துள்ளார் என்பது யூனிட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 12 ஆண்டுகளுக்கு முன் எடுத்த ‘எந்திரன்’ புகைப்படமும், அதன் தகவல்களும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

மாளவிகா மோகனின் சம்பளம் எவ்வளவு? ஒரே படத்தில் நயன்தாராவை முந்தினாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'பேட்ட' திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன்.

அஜித்தின் 'வலிமை' ஓடிடியில் ரிலீஸா? போனிகபூர் விளக்கம்   

தல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அதிரடி அறிவிப்பு

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ்

பெற்ற குழந்தைகளை இதற்கா பயன்படுத்துவது? சபரிமலை பெண் போராளி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று போராடிய பெண் போராளி ஒருவர் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து தனது குழந்தைகளையே தனது உடம்பில் பெயிண்டிங் வரைய செய்ததற்காக போலீசார்

3000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு: தமிழக கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் இரண்டாயிரத்தை தாண்டியது என்பதும் குறிப்பாக நேற்று கடந்த சில நாட்களாக 2500க்கும் மேற்பட்டவர்கள்