ரஜினியின் 'லால் சலாம்' ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ‘லால் சலாம்’ திரைப்படம் நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல்கள் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளதாக லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 32 நிமிடங்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் முந்தைய படங்கள் இதற்கு மேல் ரன்னிங் டைம்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ‘அண்ணாத்தே’ திரைப்படம் 2.44 மணி நேரம், ’ஜெயிலர்’ 2.48 மணி நேரம், ‘பேட்ட’ திரைப்படம் 2.51 மணி நேரம் என ரன்னிங் டைம் இருந்த நிலையில் ‘லால் சலாம்’ திரைப்படம் 2.32 மணி நேரமே உள்ளது.
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், ஜீவிதா, லிவிங்ஸ்டன், செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா, நிரோஷா மற்றும் சிறப்பு தோற்றத்தில் கபில்தேவ் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், ப்ரவீண் பாஸ்கர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
LAL SALAAM secures a U/A! 💥 Ensuring a thrilling match and pulse-pounding rivalries at the theatres! 🔥🤩#LalSalaam 🫡 In Cinemas 📽️✨ this FRIDAY, Feb 9th 2024 🗓️@rajinikanth @ash_rajinikanth @arrahman @TheVishnuVishal @vikranth_offl @Ananthika108 @LycaProductions… pic.twitter.com/f1U90Dyl1u
— Lyca Productions (@LycaProductions) February 6, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com