ரஜினியின் 'லால் சலாம்' ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,February 07 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ‘லால் சலாம்’ திரைப்படம் நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல்கள் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளதாக லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 32 நிமிடங்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் முந்தைய படங்கள் இதற்கு மேல் ரன்னிங் டைம்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ‘அண்ணாத்தே’ திரைப்படம் 2.44 மணி நேரம், ’ஜெயிலர்’ 2.48 மணி நேரம், ‘பேட்ட’ திரைப்படம் 2.51 மணி நேரம் என ரன்னிங் டைம் இருந்த நிலையில் ‘லால் சலாம்’ திரைப்படம் 2.32 மணி நேரமே உள்ளது.

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், ஜீவிதா, லிவிங்ஸ்டன், செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா, நிரோஷா மற்றும் சிறப்பு தோற்றத்தில் கபில்தேவ் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், ப்ரவீண் பாஸ்கர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

 

More News

விஜய்யின் அரசியல் கட்சியை கலாய்த்தாரா நடிகர் வடிவேலு? சமூக வலைத்தளங்களில் பரபரப்பு..!

விஜய்யின் அரசியல் கட்சி குறித்த கேள்விக்கு பதில் அளித்த நடிகர் வடிவேலு 'அவ்வளவுதான், போதும், வாங்க இங்கிட்டு' என்று காமெடியாக கூறியதை அவர் விஜய்யை கலாய்த்து உள்ளதாக ரசிகர்கள்

தயவுசெய்து என்னை உங்கள் படத்தில் நடிக்க கூப்பிடாதீர்கள்: கங்கனா ரனாவத் அதிர்ச்சி பதிவு..!

தயவுசெய்து உங்கள் படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என பாலிவுட் இயக்குநர் சந்தீப் ரெட்டிக்கு நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'விடாமுயற்சி' படத்தின் அடுத்த இரு கட்ட படப்பிடிப்பு எங்கே? 

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் மற்றும் பல்கேரியா நாடுகளில் நடந்து வந்த நிலையில் அடுத்த கட்டமாக வட இந்தியாவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற இருப்பதாக

விஜய்க்காக வெற்றிமாறன் தேர்வு செய்த கதை இதுதான்.. அரசியலுக்கு செமயா இருக்கும் போல..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் விஜய்க்கு வெற்றிமாறன் கூறிய கதை குறித்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

விஜயகுமார் வீட்டில் டும் டும் டும்.. முதல் அழைப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிக்குத்தான்..!

நடிகர் விஜயகுமார் வீட்டில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதல் பத்திரிகை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.