ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் நயன்தாரா? நெல்சனின் யுனிவர்ஸ் படமா?

  • IndiaGlitz, [Sunday,January 21 2024]

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ‘ஜெயிலர் 2’ படம் விரைவில் உருவாகும் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் படத்தை முடித்த பிறகு ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.

‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் சிலை கடத்தல் காரர்களிடம் தனது மகன் சிக்கி இருந்த நிலையில் அவரை மீட்டு அதன் பின் மகனையே கொலை செய்வதுடன் படம் முடிந்திருக்கும்.

இந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் சிலை கடத்தல்காரர்களிடம் ரஜினிகாந்த் மோதும் காட்சிகளும் அவர்களை முழுவதுமாக அழிக்கும் கதை அம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது

அது மட்டும் இன்றி நெல்சன் இயக்கத்தில் உருவான ’கோலமாவு கோகிலா’ படத்தின் சில கேரக்டர்களும் ‘ஜெயிலர் 2’ படத்தில் இணையும் என்றும் குறிப்பாக நயன்தாரா இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ‘ஜெயிலர் 2’படம் நெல்சனின் யுனிவர்ஸ் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

More News

ராமர் கோவில் திறப்பு விழா.. அயோத்தி புறப்பட்டார் ரஜினிகாந்த்.. வேறு யாரெல்லாம் செல்கிறார்கள்?

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், அதில் கலந்து கொள்ள பல திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பிதழ் விடுக்கப்பட்டது.

'SK21' படத்தின் டீசரை பார்த்த ரஜினி, விஜய் பட இயக்குனர்.. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் ஆகியோர்களின் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'SK21' படத்தின் டீசரை பார்த்து தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக கிரிக்கெட் அணியில் இடம்.. மகனை நினைத்து பெருமைப்படும் தமிழ் நடிகர்..!

தமிழ் நடிகர் ஒருவர் தனது மகனுக்கு U-14 தமிழக கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்துள்ளது என பெருமையாக தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.  

என் மாமியாரின் கனவு நனவானது: பிரதமர் மோடி சந்திப்பு குறித்து பிரபல நடிகை..!

சமீபத்தில் பிரதமர் மோடி சென்னை வந்த நிலையில் பிரபல நடிகையின் மாமியார் அவரை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டு எனது மாமியாரின் கனவு நினைவானது என்று குறிப்பிட்டுள்ளார்.  

'கேப்டன் மில்லர்' கதை பிரபல நடிகர் எழுதிய நாவலின் காப்பியா? அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான 'கேப்டன் மில்லர்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. வசூலிலும் திருப்திகரமாக இருப்பதாக