'ஜெயிலர்' வெற்றி பாதிப்பின்றி துறவி நிலையில் ரிஷிகேஷில் ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்தியாவில் மட்டும் இந்த படம் 40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் உலகம் முழுவதும் ரூ.80 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’ஜெயிலர்’ ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாள் இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த் ’ஜெயிலர்’ படத்தின் வெற்றி குறித்து எந்தவித பாதிப்பும் இன்றி ரிஷிகேஷில் தற்போது இருப்பதாக தெரிய வருகிறது.
ரிஷிகேஷில் உள்ள தயானந்த் சரஸ்வதி ஆசிரமத்தில் தற்போது ரஜினி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ’ஜெயிலர்’ திரைப்படம் முதல் நாள் வசூல் கிட்டத்தட்ட ரூபாய் 100 கோடி என்ற சாதனையை எட்டிய நிலையில், ரஜினிகாந்த் மிக எளிமையாக ஒரு ஆசிரமத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் இமயமலையில் இருந்து சென்னை திரும்பிய பிறகு ’தலைவர் 170’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் இந்த படம் உருவாக உள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த முடித்த இன்னொரு திரைப்படம் ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்,.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments