ரஜினி, விஜய் படங்களில் பணிபுரிந்த பிரபலம் காலமானார்: மாரடைப்பு என தகவல்!
- IndiaGlitz, [Monday,October 24 2022]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்தவர் திடீரென மாரடைப்பு காரணமாக காலமாகி உள்ளதால் கோலிவுட் திரையுலகமே சோகத்தில் உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ விஜய் நடித்த ’சர்க்கார்’ கார்த்தி நடித்த ’ஆயிரத்தில் ஒருவன்’ உள்பட பல திரைப்படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்தவர் சந்தானம். தற்போது ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ’1947’ என்ற படத்திலும் அவர்தான் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பதும், இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கலை இயக்குனர் சந்தானம் திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் என அவரது உறவினர்கள் உறுதிசெய்துள்ளனர். சந்தானம் அவர்களின் மறைவு மிகப்பெரிய இழப்பு என திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.