மதுரை நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் இன்று ஆஜராவாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' படத்தின் மீது ரவிரத்தினம் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தார். தனது 'முல்லைவனம் 999' படத்தின் கதைதான் 'லிங்கா' என்றும், தனது கதையை திருடி 'லிங்கா' படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமார், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய சினிமா கதாசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தன்னுடைய மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், வழக்கின் விசாரணை ஆரம்பிக்கப்படவில்லை. இந்த வழக்கை விரைவில் முடிக்க வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று ராக்லைன் வெங்கடேஷ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும், இந்த வழக்கை வரும் ஏப்ரலுக்குள் முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் காரணமாக மதுரை நீதிமன்றம் இன்று இந்த வழக்கின் விசாரணையை தொடங்கவுள்ளது. இதன் காரணமாக மனுதாரரும், எதிர்மனுதாரர்களான தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமார், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய சினிமா கதாசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஆகியோர்களும் இன்று ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே ரஜினிகாந்த் இன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜராவாரா? என்பது குறித்த பரபரப்பு கோலிவுட்டில் ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments