'அண்ணாத்த' படப்பிடிப்பு முடிவடைவது எப்போது? 

  • IndiaGlitz, [Sunday,April 25 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிவடைந்திருக்கும் என்ற நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. மேலும் இடையில் திடீரென ரஜினிகாந்த் அவர்களுக்கு உடல் நலக்குறைவு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைவது எப்போது? என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் மே 10ஆம் தேதிக்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளதாகவும் அதை நோக்கி பணிகள் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

அதன் பிறகு போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கி வரும் தீபாவளியன்று இந்த படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். டி. இமான் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படம் ஒரு கிராமத்து கதையம்சம் கொண்ட குடும்ப செண்டிமெண்ட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

என் மகள் கீர்த்தனா கூறிய த'கவலை' பதிவு செய்கிறேன்: இயக்குனர் பார்த்திபன்

தமிழ் திரை உலகின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன் என்பதும் அவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்கிய 'ஒத்த செருப்பு' என்ற திரைப்படம் தேசிய விருதை வென்றது என்பதும் தெரிந்ததே

முதன்முறையாக இணையும் கெளதம் மேனன் - வெற்றிமாறன்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கெளதம் மேனன் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனுடன் இணையும் தகவல் வெளிவந்து கோலிவுட் திரையுலகில் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

'எனிமி' நண்பனுக்கு என்னுடைய நன்றி: ஆர்யா டுவிட்

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்து வரும் 'எனிமி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து

ஏப்ரல் 26 முதல் திரையரங்குகள், ஜிம்கள், பார்கள் இயங்க அனுமதியில்லை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை அடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று ஏற்கனவே செய்தி வெளிவந்த நிலையில் சற்று முன் தமிழக அரசு வெளியிட்டுள்ள

இது போலி, யாரும் நம்பாதீங்க: பதறியபடி அறிவிப்பு வெளியிட்ட சிபிராஜ்!

நடிகர் சிபிராஜ் பெயரில் வெளிவந்த விளம்பரம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து அந்த விளம்பரத்தை தான் கொடுக்கவில்லை என்றும் அது முழுக்க முழுக்க போலியான விளம்பரம் என்றும் சிபிராஜ்