எப்போது மீண்டும் தொடங்கும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு?

  • IndiaGlitz, [Saturday,January 09 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருந்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக 7 மாதங்கள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்ற இந்த படப்பிடிப்பின் போது திடீரென 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன்பின் குணமாகி வீடு திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தல் முடிவடைந்தவுடன் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தான் ‘அண்ணாத்த’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது

எனவே இந்த ஆண்டு இறுதியில் தான் ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஆறு மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலால் ரஜினி ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்
 

More News

இந்த வாரம் ஒருவர் மட்டுமே எவிக்சன்: வெளியேறுபவர் இவர்தான்!

பிக்பாஸ் வீட்டில் நடந்த கடைசி நாமினேசனில் வீட்டில் இருந்த அனைத்து ஏழு போட்டியாளர்களும் நாமினேஷன் பட்டியலில் இருக்கும் நிலையில் இந்த வாரம் ஒருவர் அல்லது இருவர் வெளியேற்றப்பட

டிக்கெட் டு பினாலே டாஸ்க்; 8 சுற்றுகளின் முடிவில் முதலிடம் இவருக்கா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் 'டிக்கெட் டு பினாலே' டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் 'வாக்கியம் பொருத்துதல்' என்னும் டாஸ்க் முடிவுக்கு வந்தது.

திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி: வாபஸ் பெற்றது தமிழக அரசு!

திரையுலகினர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளை அடுத்து தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பதாக சமீபத்தில்

கோக்க மக்கா அப்டி ஒரு லவ்வு டா: 'மாஸ்டர்' புரமோ வீடியோ!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோ வீடியோ தினந்தோறும் தயாரிப்பு நிறுவனத்தின்

அமைச்சர் அமித்ஷாவுக்கு கலைப்புலி எஸ்.தாணு எழுதிய கடிதம்!

சமீபத்தில் தமிழக அரசு திரையரங்குகளுக்கு 100% இருக்கைகளை நிரப்ப அனுமதி வழங்கிய அரசாணை வெளியிட்டது என்பது தெரிந்ததே. ஆனால் இந்த அரசாணை தற்போது திரும்பப் பெறப்படும்