இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு கேட்காமலே உதவி செய்த ரஜினிகாந்த்

கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையுலகை சேர்ந்த பல தொழிலாளிகள், நலிந்த நடிகர்கள் உள்பட பலர் கஷ்டத்தில் இருக்கும் நிலையில் பெரிய நடிகர் நடிகைகள் அவர்களுக்கு அவ்வப்போது உதவிகள் செய்து வருவது தெரிந்ததே/

அந்த வகையில் தற்போது இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். இந்த பொருட்களை பெற்று கொண்ட இயக்குனர் சங்கம், ரஜினிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அன்பிற்கும்‌ பாசத்திற்கும்‌ உரிய ரஜினி சார்‌ அவர்களுக்கு,

இன்றைய கோவிட்‌ 19 வைரஸ்‌ எதிர்ப்பில்‌ தொழில்‌ இன்றி வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும்‌ உங்கள்‌ கலைக்குடும்பம்பத்தின்‌ இயக்குநர்கள்‌ சங்க உறுப்பினர்களுக்கு தாங்கள்‌ இன்று அனுப்பி வைத்த நிவாரண பொருட்கள்‌ கிடைக்கப்பெற்றோம்‌.

குறிப்பறிந்து, கேட்காமலே, உங்கள்‌ கலைக்குடும்ப சகோதரர்களுக்கு வாரி வழங்கும்‌ தங்கள்‌ கொடையுள்ளத்தை வாழ்த்த வார்த்தைகள்‌ இல்லை. போற்றுகிறோம்‌. தங்கள்‌ நலமும்‌ புகழும்‌ உயரட்டும்‌ குடும்பம்‌ நீடூழி வாழட்டும்‌...

More News

குழந்தைக்கு 'லாக்டவுன்' என பெயர் வைத்த பெற்றோர்கள்: குவியும் வாழ்த்துக்கள்

இந்தியாவில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் 'லாக்டவுன்' பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி திரிபுரா மாநிலத்தில் சஞ்சய் மற்றும் மஞ்சு என்ற தம்பதிக்கு குழந்தை ஒன்று பிறந்தது.

சாப்பாட்டை எல்லாம் வீடியோவா போடணுமா? குஷ்பு ஆதங்கம்

ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பல நடிகர் நடிகைகள் தினந்தோறும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்

அண்டாவில் பிரியாணி செய்து ஆதரவற்றோருக்கு அளித்த 'அண்ணாச்சி' நடிகர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் ஏழை எளிய மக்கள் பசி பட்டினியால் வாடி வருகின்றனர்

நிதியுதவி செய்த விஜய்க்கு நன்றி தெரிவித்த முதல்வர்: 

கடந்த சில வாரங்களாக கொரோனா வைரசுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் போராடி வரும் நிலையில் அரசுக்கு உதவும் வகையில் பணக்காரர்கள், தொழிலதிபர்கள்

உண்மையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கொரோனாவை குணப்படுத்துகிறதா???  ஆய்வு முடிவு!!!

அமெரிக்க அதிபர்  டெனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இறக்குமதி செய்ததில் இருந்து உலகம் முழுக்க இந்த மருந்து பேசுபொருளாகவே மாறிவிட்டது.