ரஜினியின் உடல்நிலை.. மருத்துவர்கள் கூறிய லேட்டஸ்ட் தகவல்.. 'கூலி' படப்பிடிப்பு தாமதமாகுமா?

  • IndiaGlitz, [Wednesday,October 02 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவர்கள் ஏற்கனவே தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில் தற்போது நடிகர் ரஜினி மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும், தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சொக்கலிங்கம் வெளியிட்ட தகவலில், ரஜினிக்கு மூன்று வாரங்கள் ஓய்வு தேவை. மூன்று வாரங்கள் கழித்து அவர் வழக்கமான பணிகளை தொடரலாம், இப்போது அவர் நலமுடன் உள்ளார், நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார், என்றும் கூறியுள்ளார்.

மேலும், ரஜினிகாந்த் என்னுடைய 50 வருட நண்பர், நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமானவர்கள். ரஜினிகாந்த் விட்டால் நாளையே படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்கிறார், ஆனால் அவர் கண்டிப்பாக மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். மூன்று வார ஓய்வுக்கு பின் அவர் பழைய நிலைக்கு திரும்பி விடுவார், என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் ‘நான் நன்றாக இருக்கிறேன் என மக்களிடம் சொல்லிவிடுங்கள் என்று ரஜினிகாந்த் என்னிடம் கூறினார்’ என்று மருத்துவர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

More News

கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கலந்துகொள்ளும் DMY கிரியேஷன் நிறுவனர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி..!

திரையுலக முன்னணி பிரபலங்கள் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும்,  DMY கிரியேஷன் நிறுவனர் மகனின் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி !!

ரஜினியின் உடல்நிலை: லதா ரஜினியிடம் போனில் பேசிய பிரதமர் மோடி..!

சூப்பர் ஸ்டார் ரஜினி உடல்நிலை குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்திடம் பிரதமர் மோடி விசாரித்ததாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

'கோட்' படத்தில் பட்டையை கிளப்பிய டான்ஸ் மாஸ்டர்.. 'தளபதி 69ல் இணைகிறாரா?

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் ஒரு சூப்பர் ஹிட் பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய சேகர் மாஸ்டர், தளபதி 69 படத்திலும் ஒரு பாடலுக்காக நடன இயக்குனராக பணியாற்ற

'பரிதாபங்கள்' லட்டு வீடியோ மீண்டும் பதிவேற்ற வேண்டும்: டிஜிட்டல் படைப்பாளிகள்

பரிதாபங்கள் யூடியூப் சேனலின் நிறுவனர்கள் கோபி சுதாகருக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை வன்மையாக கண்டிக்கிறோம் என தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை: தளபதி விஜய் பதிவு செய்த ட்வீட்..!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று தளபதி விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.