ரஜினியின் உடல்நிலை.. மருத்துவர்கள் கூறிய லேட்டஸ்ட் தகவல்.. 'கூலி' படப்பிடிப்பு தாமதமாகுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவர்கள் ஏற்கனவே தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில் தற்போது நடிகர் ரஜினி மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும், தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சொக்கலிங்கம் வெளியிட்ட தகவலில், "ரஜினிக்கு மூன்று வாரங்கள் ஓய்வு தேவை. மூன்று வாரங்கள் கழித்து அவர் வழக்கமான பணிகளை தொடரலாம், இப்போது அவர் நலமுடன் உள்ளார், நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்," என்றும் கூறியுள்ளார்.
மேலும், ரஜினிகாந்த் என்னுடைய 50 வருட நண்பர், நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமானவர்கள். ரஜினிகாந்த் விட்டால் நாளையே படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்கிறார், ஆனால் அவர் கண்டிப்பாக மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். மூன்று வார ஓய்வுக்கு பின் அவர் பழைய நிலைக்கு திரும்பி விடுவார்," என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் ‘நான் நன்றாக இருக்கிறேன் என மக்களிடம் சொல்லிவிடுங்கள் என்று ரஜினிகாந்த் என்னிடம் கூறினார்’ என்று மருத்துவர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout