கார்த்திக் சுப்புராஜூக்கு ரஜினி கொடுத்த கால்ஷீட் நாட்கள்
- IndiaGlitz, [Tuesday,March 27 2018]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்திற்காக ரஜினிகாந்த் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.