முதல்வரை நேரில் சந்தித்து நிதி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தமிழக அரசுக்கு தமிழக மக்கள். தொழிலதிபர்கள். திரை உலக பிரபலங்கள் தாராளமாக நிதி உதவி செய்து வருகின்றனர்
குறிப்பாக திரையுலகை பொருத்தவரை சிவகுமார் குடும்பத்தினர் ஒரு கோடி, ரஜினி மகள் குடும்பத்தினர் ஒரு கோடி, ஏஆர் முருகதாஸ் 25 லட்சம், தல அஜித் 25 லட்சம், ஷங்கர் 10 லட்சம் என பலர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 50 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பை ரஜினிகாந்த் வழங்கியதை அடுத்து அவரது ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்
முதல்வரிடம் நிதியளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் ’தமிழக அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கினார். #TNCMCoronaReliefFound #coronaupdates pic.twitter.com/l2ICK6UYto
— Johnson PRO (@johnsoncinepro) May 17, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com