கேரள வெள்ள நிவாரண நிதியாக ரஜினி கொடுத்த தொகை

  • IndiaGlitz, [Saturday,August 18 2018]

கடவுளின் தேசம் என்று அழைக்கப்பட்ட கேரள மாநிலம் இன்று வெள்ளத்தின் பிடியில் தத்தளித்து வருகிறது. அங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஒரே நாளில் தாங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த சொத்துக்களையும் சொந்தங்களையும் இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேரள மக்களின் துயர் துடைக்க கோலிவுட் திரையுலகினர் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர். ஏற்கனவே கமல், விஷால், கார்த்தி சூர்யா, உதயநிதி, விஜய்சேதுபதி, தனுஷ், சித்தார்த், சிவகார்த்திகேயன், நயன்தாரா, ரோஹிணி உள்பட பலர் நிதியுதவி செய்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சார்பில் ரூ.10 லட்சம் கேரளா வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.