கட்சி தொடங்கும் முன்னரே அதிருப்தியா? நிர்வாகிகளை சமாளிப்பாரா ரஜினி?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தனது அரசியல் வருகையை உறுதி செய்தது மட்டுமின்றி தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி என்பவரை நியமனம் செய்தார் என்பதும் தெரிந்ததே.
தற்போது அர்ஜுனா மூர்த்தி ரஜினி மக்கள் மன்றம் என்பதை அரசியல் கட்சியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சற்று முன் வந்த செய்தியின்படி நிர்வாக வசதிக்காக இதுவரை 38 மாவட்டங்களாக இருந்த ரஜினி மக்கள் மன்றங்களை 60 மாவட்டங்களாக விரிவுபடுத்த ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாகவும் மாவட்டங்களை பிரிக்கும் பணிகளை மேற்கொள்ள ரஜினி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனன் மூர்த்திக்கு அவர் அதிகாரம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. வரும் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என அறிவித்த ரஜினிகாந்த், அர்ஜுனா மூர்த்தியையும் தமிழருவி மணியனை அதிகாரபூர்வ நிர்வாகிகளாக அறிவித்தார்.
ஆனால் இதுவரை ரஜினி மக்கள் மன்ற நிர்வாக பணிகளை கவனித்து வந்த சுதாகருக்கு ரஜினி எந்தவித பொறுப்பும் வழங்காமல் இருப்பதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சி தொடங்குவதற்கு முன்னரே நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இதனை எப்படி ரஜினிகாந்த் சமாளிக்க உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout