அபிராமி கணவருக்கு முக்கிய பதவி கொடுத்த ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Friday,September 07 2018]

சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அபிராமியின் கணவர் விஜய்யை நேரில் அழைத்த ரஜினிகாந்த் அவருக்கு ஆறுதல் தெரிவித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய பொறுப்பு ஒன்றை விஜய்க்கு ரஜினிகாந்த் வழங்கியுள்ளார்.

சென்னை குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் அபிராமிக்கு அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. கள்ளக்காதலனுடன் ஓடிப்போக தயாரான அபிராமி, கணவரையும் குழந்தைகளையும் கொலை செய்ய முயற்சித்தார். இந்த முயற்சியில் கணவர் மட்டும் தப்பிக்க இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் அபிராமியை கைது செய்து சிறையில் சிறையில் அடைத்தனர்.

இரண்டு குழந்தைகளின் மறைவால் அதிர்ச்சியுற்று இருந்த விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் ஆறுதல் தெரிவித்தார். மேலும் குன்றத்தூர் ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞர் அணியின் இணைசெயலாளர் என்ற பதவியையும் அவர் விஜய்க்கு அளித்துள்ளார்.

 

More News

விஜய்சேதுபதிக்கு கிடைத்த கமல் வகித்த பதவி

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த புரோ கபடி போட்டி இவ்வாண்டு ஆறாவது ஆண்டாக அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளது.

தனுஷ் இயக்கும் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் இயக்கிய 'பவர் பாண்டி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி திருப்திகரமான வசூலையும் கொடுத்தது.

அடுத்த வார செமி பைனலில் நேருக்கு நேராக மோதும் மும்தாஜ்-ரித்விகா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கில் ரித்விகா தவிர அனைவரும் வெற்றிகரமாக செயல்பட்டதால் நேரடி நாமினேஷனில் இருந்து தப்பித்தனர். ரித்விகா மட்டும் தனக்கு கொடுத்த டாஸ்க்கில் வெற்றி பெறமுடியவில்லை

மீண்டும் அரசியல் களத்தில் குதித்த பிரபல நடிகர்

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத அரசியல் களத்தில் வெற்றிடத்தை நிரப்புவதாக கூறிக்கொண்டு கோலிவுட் திரையுலகினர் பலர் அரசியல் களத்தில் குதித்து வருகின்றனர்.

ஷோபியாவின் சிம்கார்டு, பாஸ்போர்ட் முடக்கம்: தந்தை குமுறல்

கனடாவில் ஆராய்ச்சி படிப்பை படித்து வரும் சோபியா என்ற மாணவி சமீபத்தில் விமானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்