தனுஷூக்கு ரஜினி கொடுத்த மறக்க முடியாத கிஃப்ட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மருமகன் தனுஷுக்கு கொடுத்த மறக்க முடியாத கிப்ட் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை சமீபத்தில் பிரிவதாக தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் என்பதும் இந்த அறிவிப்பு ரஜினியின் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது என்பது தெரிந்ததே. அதேபோல் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வரும் இந்த அறிவிப்பைக் கேட்டு கடும் சோகத்தில் மூழ்கினர்.

இந்த நிலையில் தனுஷ், ஐஸ்வர்யாவை திருமணம் செய்த பின்னர் ரஜினியும் தனுஷும் மாமனார்-மாப்பிள்ளை உறவையும் தாண்டி மிகவும் நெருக்கமானாகள் என்பதும் தனுஷ் ஒரு சிவ பக்தர் என்பதால் அவருக்காக இமயமலையிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட ருத்ராட்ச மாலையை ரஜினி அவருக்கு பரிசாக அளித்தார் என்றும், அந்த ருத்ராட்ச மாலை வந்த பின்னர்தான் தனுஷின் திரை உலக வாழ்க்கை உச்சத்துக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பல புகைப்படங்களில் ரஜினி கொடுத்த ருத்ராட்ச மாலையை தனுஷ் அணிந்து இருப்பதையும் ரசிகர்கள் கவனித்திருக்கலாம். இந்த நிலையில் ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தாலும், அந்த ருத்ராட்ச மாலையை தொடர்ந்து அவர் அணிந்து இருப்பார் என்று அவரது வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.